ஒத்திசைவு பட்டியல் அதிகாரம்: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

56


சென்னை: மாநில மொழிகள், கலாசாரங்களை அழிக்க பார்க்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


மாநில சுயாட்சி ஏன் தேவை? என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி அதனை சட்டமியற்றும் தகுதியற்றவைகளாக தகுதியை குறைத்து, சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாக மாற்ற நினைக்கிறது மத்திய பா.ஜ., அரசு. கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திசைவு பட்டியல் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அதிகாரங்களாக மாற்றி விட்டது.

மாநில அமைப்பை காப்பதே மக்களை காக்கும் என்பதால் மாநில சுயாட்சி முழக்கத்தை தி.மு.க., ஓங்கி ஒலிக்கிறது. மாநில சுயாட்சிக்காக கருணாநிதி குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிக மிக மோசமான காலமாகும். அன்று ஒரு சில அதிகாரங்களே பறிக்கப் பட்டன; இன்று மத்திய அரசு, மாநில அரசுகளை முடக்கப்பார்க்கிறது. மாநில மொழிகள், கலாசாரங்களை அழிக்கப்பார்க்கின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement