வாரிசு அரசியலை வெளிக்காட்டும் பட்டியல்!

19


தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலாளர் சிவ.பத்மநாபன் பேச்சு: நாட்டின் தேசியக்கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்ற உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.


பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக மாநில முதல்வர் இருக்க வேண்டும் என்ற உரிமையை சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி பெற்றுத்தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.


மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரான நடவடிக்கையை வென்று பாதுகாப்பவர் துணை முதல்வர் உதயநிதி. நேற்று, இன்று, நாளை என்று மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வரும் சமூக நீதி கட்சியாக தி.மு.க., திகழ்ந்து வருகிறது.

கமென்ட்: தி.மு.க.,வில் தாத்தா, அப்பா, மகன் என்று வாரிசு அரசியல் தான் நடக்கிறது என்பதை நாசூக்காக சொல்கிறாரோ?




தினமலர் பேச்சு பேட்டி அறிக்கையில் இருந்து....

Advertisement