சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தில் மர்மம்!

திருநெல்வேலி: நாங்குநேரியை சேர்ந்த மாணவன் சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சேர்ந்த அம்பிகாவதி மகன் சின்னத்துரை 20. இவர் வள்ளியூர் பள்ளியில் பயின்றபோது 2023ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். பலத்த காயமுற்ற சின்னத்துரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் அவருக்கு தேவையான உதவிகள், சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது திருநெல்வேலி திருமால் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அரசு ஏற்பாட்டில் வசிக்கின்றனர். சின்னத்துரை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.
சின்னத்துரை அலைபேசி செயலி ஒன்றின் மூலம் சிலரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதில் தொடர்பு கொண்ட சிலர் அவரை தனியாக அழைத்துள்ளனர்.
அங்கு சென்ற அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து அலைபேசி, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். ஏற்கனவே அரிவாள் வெட்டுப்பட்ட வலது கையிலேயே மீண்டும் காயம் ஏற்பட்டது நேற்று இரவு அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
சின்னத்துரையிடம் போலீசார் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், பாஸ்வேர்டையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார்.அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்துரையின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.









மேலும்
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
-
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
-
வாரிசு அரசியலை வெளிக்காட்டும் பட்டியல்!