ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், வீர் சோத்ரானி முன்னேறினர்.
அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9-17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், பிலிப்பைன்சின் ஜெமிகா அரிபாடோ மோதினர். இதில் அனாஹத் 3-0 (11-4, 11-5, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி, ஹாங்காங்கின் கா சிங் செங் மோதினர். இதில் தன்வி 3-1 (11-7, 11-8, 8-11, 12-10) என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் அகன்க் ஷா சாலுங்கே 3-0 (11-4, 11-3, 11-8) என ஜப்பானின் ரிசா சுகிமோட்டோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோத்ரானி, மலேசியாவின் ஆங் சாய் ஹங் மோதினர். இதில் வீர் 3-0 (11-7, 11-8, 14-12) என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மேலும்
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
-
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை