வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

14

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை விவகாரத்தில் பொய்யான தகவலை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.


சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வவு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, ' சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை அளித்த விளக்கத்தில் ' டாஸ்மாக் அலுவலக சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை. பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை. பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது' எனத் தெரிவித்து உள்ளது.

Advertisement