வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!

20

புதுடில்லி:வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தது.


சமீபத்தில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியை, தாவூதி போஹ்ரா அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சமூகம், ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்ததாகும். இந்த சமூகத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள்.

இந்த அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று கலந்து பேசினார்.

பின்னர் தாவூதி போஹ்ரா பிரதிநிதிகள் கூறியதாவது:

இந்த வக்ப் திருத்தச் சட்டம், எங்கள் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.இதை நிறைவேற்றியதற்கு மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம்.

பிரதமரின் 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்'(அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை) என்ற தொலைநோக்குப் பார்வையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement