அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்

7

சென்னை : கட்சியின் அனுமதியின்றி டிவி, சமூக ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு நிர்வாகிகள் பேட்டி கொடுக்க கூடாது என அ.தி.மு.க., கூறியுள்ளது.


இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்த தகவல்களை கட்சி தலைமை உரிய நேரத்தில் தெரிவிக்கும்.


அ.தி.மு.க., கட்சி தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள் கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எவ்வித கருத்துகளையும், கட்சி தலைமையின் அனுமதி பெறாமல் டிவிக்கள், சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அதிமுக தெரிவித்து உள்ளது.

Advertisement