போதையில் தந்தையை  தாக்கிய மகன் கைது

சிவகங்கை: சிவகங்கையில் போதையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம் 33. இவர் நேற்று போதையில் தனது தந்தை மாரியிடம் 65 தனக்கு திருமணம் செய்து வைக்காமல் தாமதிப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார்.

ஆத்திரம் அடைந்த அன்புச்செல்வம் கல்லால் தந்தை மாரியை தலை மற்றும் முகத்தில் தாக்கினார்.

காயமடைந்த மாரியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

போலீசார் அன்புச்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement