உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

10



சென்னை: சென்னையில் உயிருக்கு போராடிய சிறுவனை நொடியில் காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்ற சிறுவனை மீது மின்சாரம் தாக்கியது. அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இளைஞரின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


இது குறித்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணன் கூறியதாவது: சிறுவனை காப்பாற்றிய போது என்னையும் மின்சாரம் தாக்கியது. சிறுவனை காப்பாற்ற வேண்டும் எண்ணம் இருந்ததால் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.


சிறுவனை காப்பாற்றிய இளைஞர் ரியல் ஹீரோ தான் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement