கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை

3

சென்னை: த.வெ.க., சமூக வலைதளப் பிரிவினர் கண்ணியத்துடனும், நாகரீகத்துடனும் செயல்பட வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.


த.வெ.க.,வின் சமூக வலைதளப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.


அந்த வீடியோவில் விஜய் கூறியுள்ளதாவது: நமது சமூக வலைதள படை தான் இந்தியாவில் மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இதை நாம் சொல்வதைவிட மற்றவர்கள் பார்த்து தெரிந்து கொள்கின்றனர். இனிமேல், நீங்கள் வெறும் சமூக வலைதள ரசிகர்கள் மட்டும் கிடையாது. நீங்கள் அனைவரும் மெய்நிகர் வீரர்கள்.


நமது குழுவினர் நாகரீகமானவர்கள், கண்ணியமானவர்கள் என மற்றவர்கள் சொல்ல வேண்டும். அந்த வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். இவ்வாறு விஜய் பேசினார்.

Advertisement