லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்

லடாக்: ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான லடாக் பகுதிகளில் அதிவேக இணைய சேவை பெற உதவும் 4ஜி, 5ஜி இணைப்பை இந்திய ராணுவம் வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் எல்லையில்,கால்வான், டெம்சோக், சூமார் மற்றும் சியாச்சின் பனிமலை ஆகியவை முக்கிய தொலைதுார பகுதிகள் விளங்குகின்றன. இந்த பகுதிகள் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் உள்ளன.

இங்கு, 4ஜி மற்றும் 5ஜி மொபைல் இணைப்பை வெற்றிகரமாக இந்திய ராணுவம் வெற்றிகரமாக அமல்படுத்தி இருக்கிறது. இந்த முன்னேற்றம், கடினமான மலைப்பாங்கான பகுதிகளில் பணியாற்றும் ராணுவத்தினரின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்த முயற்சி, அரசாங்க கட்டமைப்பின் கீழ் ஒரு கூட்டு அணுகுமுறை மூலம் சாத்தியமாகியுள்ளது. இதன் விளைவாக லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் நான்கு முக்கிய கோபுரங்கள் உட்பட ராணுவ உள்கட்டமைப்பில் பல மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.


இந்த இணைப்பு, படையினருக்கு விரைவான மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வழங்கி, செயல்திறனை அதிகரிக்கும். சியாச்சினில் அதிவேக இணையம் கிடைப்பது, கடுமையான வானிலையில் பணியாற்றும் படையினருக்கு உதவியாக இருக்கும்.

கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்துக்கு மேல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு பேருதவியாக இருக்கும். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்க முடியும்.

Advertisement