மானாமதுரை வாரச்சந்தையில் திருட்டு
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. மதுரை, சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக வாரச்சந்தைக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவி மாலை 6:00 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பொருட்களை வாங்குவது போன்று வந்து பணம் மற்றும் அலைபேசியை திருடி வருகின்றனர்.
போலீசார் வாரச்சந்தையன்று ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement