விடுதியில் வீடற்றோர் தங்கவைக்க மாநகராட்சி நடவடிக்கை தேவை

அனுப்பர்பாளையம்; திருப்பூரில் வீடற்றோர் அதிகளவில் உள்ளனர். இவர்கள் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், கடை வீதி, கோவில் முன்பு உள்ளிட்ட இடங்களில் தங்கி வருகின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ளுதல், குடிபோதையில் தகராறு செய்தல், பஸ் ஸ்டாண்டில் தங்குபவர்களால் பயணிகளுக்கு இடையூறு, ரோட்டில் தங்குபவர்களால் விபத்து உள்ளிட்டவை அடிக்கடி நடக்கிறது. வீடற்ற ஏழைகள் தங்குவதற்கு மாநகராட்சி சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், பி.என்., ரோட்டில் குமரன் பூங்கா அருகில், ஆலாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீடற்ற ஏழைகள் தங்கும் அறை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், உள்ளிட்ட ஆங்காங்கே தங்கும் வீடற்ற ஏழைகளை மாநகராட்சி தங்கும் விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement