புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு

சஞ்சய்நகர்: புதிதாக கட்டப்படும் கட்டடம் ஒன்றில், தம்பதி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தனர். உடல்களை மீட்டு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
யாத்கிர் நகரை சேர்ந்தவர் மெஹபூப், 45. இவரது மனைவி பர்வீன், 35. தம்பதி ஓராண்டுக்கு முன், பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர்.
சஞ்சய் நகரின் டாலர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் பணி செய்தனர். மெஹபூப் மேஸ்திரியாகவும், அவரது மனைவி சித்தாளாகவும் பணியாற்றினர்.
இதே கட்டடத்தில் தம்பதி தங்கியிருந்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பினர். சில நாட்களாக கட்டடத்தில் பணிகள் நடக்கவில்லை. தம்பதி இங்கு தங்கியிருந்தனர்.
இதற்கிடையே கட்டடத்தில் இருந்து, துர்நாற்றம் வீசுவதை கவனித்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சஞ்சய் நகர் போலீசார், கட்டடத்துக்குள் சென்று சோதனை நடத்திய போது, தம்பதி இறந்து கிடப்பது தெரிந்தது. இவர்கள் மூன்று நாட்களுக்கு முன் இறந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மெஹபூப் தரையில் கிடந்தார்; அவரது உடலில் காயங்கள் தென்பட்டன. பர்வீன் துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். ஏதோ காரணத்துக்காக, தம்பதிக்குள் சண்டை நடந்திருக்கலாம்.
இதில் மெஹபூப் காயமடைந்து இறந்திருக்க கூடும். கணவர் இறந்ததை பார்த்து பயத்தில் மனைவி பர்வீன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
மேலும், மர்ம கும்பல் திருடும் நோக்கில், கட்டடத்தில் புகுந்து மெஹபூபை தாக்கி கொலை செய்து விட்டு, பர்வீனை துாக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருவரின் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்