தமிழக போலீசாருக்கு சத்குரு நன்றி

தொண்டாமுத்தூர்; பிரபலங்களை பற்றிய போலி செய்திகள் மூலம் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக போலீசாரின் நடவடிக்கைக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், நாட்டின் பிரபலமானவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, மர்ம நபர்கள், பணம் பறிக்கும் நோக்கில், மோசடி முதலீட்டு லிங்க்குகளை, சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து, சமீபத்தில், மோசடி முதலீட்டு வலைதளங்கள் குறித்து தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபலங்களை பற்றிய போலி செய்திகளை பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப்பதிவுகள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.

இவ்வாறு சத்குரு பதிவிட்டுள்ளார்.

Advertisement