எஸ்.சி.,யில் 101 உட்பிரிவுகள் கணக்கெடுக்க முனியப்பா உத்தரவு

பெங்களூரு: -எஸ்.சி.,யில் உள்ள 101 உட்பிரிவுகள் குறித்து தரவுகள் அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு, உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தகவல் கசிந்தது முதல், தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், அதிகாரிகளுடன் உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா ஆலோசனை நடத்தினார்.

பின் அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் எஸ்.சி., சமுதாயத்தில் உள்ள 101 உட்பிரிவினருக்கு அநியாயம் ஏற்படக்கூடாது. இது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

இந்த ஆய்வுக்கு 54,000 ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தி, இரண்டு மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். இதில் 15 நாட்கள் கடந்து விட்டன. விரைந்து முடிக்க கூறி அறிவுறுத்தி உள்ளேன். கர்நாடகாவில் 'ஆதி கர்நாடகா, ஆதி திராவிடர்' தொடர்பான குழப்பம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு வழிகாட்டி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement