மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3.26 கோடி காணிக்கை வசூல்

சாம்ராஜ் நகர்: மலை மஹாதேஸ்வர சுவாமி கோவில் உண்டியலில், 35 நாட்களில் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலைக்கோவில் அமைந்துள்ளது. அதிக வருவாய் கொண்ட கர்நாடகாவின் கோவில்களில், இதுவும் ஒன்றாகும். மாதந்தோறும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். 35 நாட்களுக்கு முன், உண்டியல் எண்ணப்பட்டது.

தொடர் விடுமுறைகள், யுகாதி பண்டிகை இருந்ததால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. இரவு 10:00 மணி வரை எண்ணும் பணி நடந்தது.

உண்டியலில் 3 கோடியே 26 லட்சத்து 95,339 ரூபாய் ரொக்கம்; 47 கிராம் தங்கம், 2.200 கிலோ வெள்ளி பொருட்கள்; 11 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன.

Advertisement