காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக, காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூர், கீரைக்காரர் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜ்குமார், 20; இவரும், அம்மணகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் மகள் சிவரஞ்சனி, 20, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
புதுச்சேரி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிவரஞ்சனி கடந்த 15ம் தேதி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பினர்.
சிவரஞ்சனியின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொள்ளவதற்கு முன், ராஜ்குமாரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளது தெரியவந்தது.
விசாரணையில், ராஜ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்துகொண்டது ஊர்ஜிதமானது.
அதையடுத்து, சிவரஞ்சனியை தற்கொலைக்கு துாண்டியதாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்