காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி

7

டெய்ர் அல் - பலாஹ்: காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 90 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 90 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement