பிரீமியர் லீக் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

பெங்களூரு: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34வது லீக் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் இரவு 9: 30 மணிக்கு டாஸ் போடப்பட்டது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பவுலிங் செய்ய முடிவு செய்தார். மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
முதலில் பெங்களூரு அணி டே்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சால்ட் முதல் ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். கோலி 1 ரன், லிவிங்ஸ்டோன் 4, ஜிதேஷ் சர்மா 2, க்ருணல் பாண்டியா 1 ரன்னில் அவுட்டானார்கள். அந்த அணி 8.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், இறுதியில் 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அர்ஷத்தீப் சிங், மார்க்கோ ஜான்சன், யஷ்வேந்திரா சாஹல், தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
96 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பரசிம்ரன்சிங் 13 ரன்களிலும், பிராயன்ஷ் ஆர்யா 16 ரன்களிலும், ஸ்ரோ அய்யர் 7 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில் 12.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்