பெண்கள் உலக கோப்பை: பாக்., தகுதி

லாகூர்: இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் பெண்கள் அணி தகுதி பெற்றது.
ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடக்கின்றன. 6 அணிகள் மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
லாகூரில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தாய்லாந்து மோதின. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 205/6 ரன் எடுத்தது. அடுத்து தாய்லாந்து அணி 34.4 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 87 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இதுவரை முடிந்த 4 போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி (4 வெற்றி), 8 புள்ளியுடன் முதல் இரு இடத்தை உறுதி செய்து, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
வங்கதேசம் (6, ரன்ரேட் 1.033), ஸ்காட்லாந்து (4, +0.136), வெஸ்ட் இண்டீஸ் (4, -0.283) அணிகள் அடுத்த 3 இடத்தில் உள்ளன. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டிகளில் பாகிஸ்தான் - வங்கதேசம், ஸ்காட்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மறுபக்கம் வங்கதேசம் மோசமாக தோற்றால், வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.
இந்தியாவில் நடக்குமா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதையடுத்து, ' வரும் 2027 வரை இந்தியா, பாகிஸ்தானில் நடக்கும் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர்களில் இரு அணிகள் மோதும் போட்டி பொதுவான வேறு இடத்தில் நடத்தப்படும்,' என முடிவு செய்யப்பட்டது. இதன் படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகள் துபாயில் நடந்தன. இதுபோல, வரும் பெண்கள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும். இதனால் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி சொந்தமண்ணில் நடப்பது சந்தேகமாக உள்ளது.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்