'சிக்சர்' பாதையில் ரோகித் சர்மா...

மும்பை: ''ரோகித் சர்மா மீண்டும் இமாலய சிக்சர் விளாச துவங்கியுள்ளார். விரைவில் பெரிய ஸ்கோர் எடுப்பார்,''என மார்க் பவுச்சர் தெரிவித்தார்.
பிரிமியர் அரங்கில், மும்பை அணிக்கு 5 கோப்பை வென்று தந்தவர் ரோகித் சர்மா. தற்போதைய தொடரில் தடுமாறுகிறார். 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கும் இவர், 6 போட்டிகளில் 82 ரன் (0, 8, 13, 17, 18, 26, சராசரி 13.66) தான் எடுத்துள்ளார்.
'சிக்சர்' சாதனை
ஐதராபாத்திற்கு எதிரான கடந்த போட்டியில் 16 பந்தில் 3 சிக்சர் உட்பட 26 ரன் எடுத்து 'பார்மிற்கு' திரும்பியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் 100 சிக்சர் (83 போட்டி) அடித்த முதல் வீரரானார். அடுத்த இடத்தில் போலார்டு (85 சிக்சர்) உள்ளார்.
* பிரிமியர் அரங்கில் ஒரே மைதானத்தில் 100+ சிக்சர் அடித்த நான்காவது வீரரானார் ரோகித். முதல் மூன்று இடத்தில் கோலி (130 சிக்சர், பெங்களூரு சின்னசாமி மைதானம்), டிவிலியர்ஸ் (118, சின்னசாமி மைதானம்), கெய்ல் (127 சிக்சர், சின்னசாமி மைதானம்) உள்ளனர்.
* மும்பை சார்பில் 250 சிக்சர் (227 போட்டி) என்ற மைல்கல் எட்டிய இரண்டாவது வீரரானார் ரோகித். முதலிடத்தில் போலார்டு (258 சிக்சர், 211 போட்டி) உள்ளார்.
* பிரிமியர் அரங்கில் ஒரு அணிக்காக அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் 5வது இடம் பெற்றார் ரோகித் (மும்பை, 251 சிக்சர், 227 போட்டி). முதலிரண்டு இடத்தில் கோலி(பெங்களூரு, 296 சிக்சர், 273 போட்டி), கெய்ல் (பெங்களூரு, 263 சிக்சர், 91 போட்டி) உள்ளனர். 3,4வது இடத்தில் முறையே போலார்டு (மும்பை, 258 சிக்சர், 211 போட்டி), தோனி (சென்னை, 256 சிக்சர், 265 போட்டி) உள்ளனர்.
நாளை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன. இதில் ரோகித் 6 சிக்சர் விளாசினால், தோனியை முந்தலாம்.
'பழைய' ஆட்டம்
இது பற்றி தென் ஆப்ரிக்க முன்னாள் 'கீப்பர்-பேட்டர்' மார்க் பவுச்சர் கூறுகையில்,''ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அசத்தினார். பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 'பழைய' ரோகித் போல சிக்சர் விளாசினார். விரைவில் பெரிய ஸ்கோரை எட்டுவார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உலகின் சிறந்த 'ஆல்-ரவுண்டராக' திகழ்கிறார். ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்த இவர், 9 பந்தில் 21 ரன் எடுத்தார். இவர் விளாசும் போதெல்லாம் மும்பை வெற்றி பெறுகிறது,'' என்றார்.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்