வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

மானாமதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கமுதக்குடியைச் சேர்ந்த உறவினர்கள் வேனில் சமயபுரம் கோவிலுக்கு சென்றனர்.

நேற்று மாலை 5:00 மணிக்கு முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நான்கு வழிச்சாலையின் நடுவே கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த பூபதி 42 சசிவர்ணம் 62, மங்கையர்க்கரசி 42 முனியசாமி 40 உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement