வாலிபர் மர்மச்சாவு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சூரியன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன்22. இவர் நேற்று முன்தினம் மாலை, அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அலைபேசியில் பேசிக் கொண்டே சென்றவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து மறுநாள் வரை காணவில்லை. குடும்பத்தினர் தேடிய போது கண்மாய் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement