ஊட்டி சீசனுக்காக மூன்று சுற்று பஸ்கள் இயக்கம்

ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வர ஏதுவாக, மூன்று சுற்று பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

ஊட்டியில், சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கோடை விழா நடப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகர சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் சுற்று பஸ்களை இயக்கி வருகிறது.

இந்த பஸ்கள், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன் மற்றும் தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா மையங்களுக்கு, பயணிகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப, மூன்று பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

சுற்று பஸ்களின் இயக்கத்தால், சுற்றுலா மையங்கள் மற்றும் நகர சாலைகளில் வாகன போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.

Advertisement