பள்ளி அளவில் கால்பந்து போட்டி செட்டிநாடு வித்யாஷ்ரம் 'சாம்பியன்'
சென்னை, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பையனுார் பகுதியில் நடந்தது.
இதில், சி.பி.எஸ்.இ., - இ.சி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட 21 அணிகள் உற்சாகமாக பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும், ஏழு பேர் மட்டுமே விளையாடினர்.
அரையிறுதி போட்டி ஒன்றில், சிறுசேரி பி.எஸ்.பி.பி., அணி, 5 - 0 என்ற கணக்கில் தாம்பரம் ட்ரைலீவ்ஸ் பள்ளி அணியை தோற்கடித்தது.
ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் அணி, 1 - 0 என்ற கணக்கில், பொன்னேரி வேலம்மாள் பள்ளியை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் சிறுசேரி ஆர்.ஏ., புரம் பி.எஸ்.பி.பி., பள்ளி அணிகள் எதிர்கொண்டன. அதில், 4 - 2 என்ற கோல்கணக்கில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
ட்ரைலீவஸ் பள்ளி, வேலம்மாள் பள்ளி அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை வென்றன.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்