சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்


சத்தியமங்கலம்:சத்தி, பங்களாப்புதுார் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், பணிகள் மந்தமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

சத்தியமங்கலம் போலீஸ் சப்-டிவிசனில் சத்தி, பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. பங்களாபுதுார் இன்ஸ்பெக்டர் தேவராஜ், கடந்த ஜன., மாதம் ஓய்வு பெற்றார்.


இதனால் சத்தி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, கூடுதல் பொறுப்பாக பங்களாபுதுாரை கவனித்து வருகிறார். இதேபோல் சத்தி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கடந்த மாதம் பணியிடம் மாற்றப்பட்டார். புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறார். மாவட்ட எல்லையில் உள்ள முக்கியமான இரு ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், அனைத்து பணிகளும் மந்தமாக நடக்கிறது. மேலும் காலம் தாழ்த்தாமல் இன்ஸ்., பணியிடத்தை விரைந்து நிரப்ப, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement