வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறிய துாத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர், 7வது மலை ஏறும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


கோவை, வெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும்.


மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள். பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.



அந்த வகையில், வெள்ளியங்கிரி மலை ஏறிய துாத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர், 7வது மலை ஏறும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


மலையில் உயிரிழந்த இளைஞர் உடலை டோலி கட்டி வனத்துறையினர் மீட்டனர்.

Advertisement