ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்

9

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ஆறுதல் கூறினார். இங்கு நடந்த கொடுமைகள் மனிதத் தன்மை அற்ற செயல் என கண்டித்துள்ளார்.


வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இம்மாநில முர்சிதாபாத் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஹிந்துக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகம் தாக்கப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகளும் நடந்ததாக கூறப்படுகிறது.



முர்ஷிதாபாத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கவர்னர் ஆனந்த் போஸ் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் மகளிர் தேசிய கமிஷன் தலைவர் விஜய ரஹத்கார் தலைமையிலான குழுவினர் மால்டாவில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர். " பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்ததை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டு நேரில் வந்துள்ளோம். மனித தன்மை அற்ற செயல். கண்டிக்கத்தக்கது. இது போன்ற கொடுமைகள் பொறுத்துக் கொள்ள முடியாது. இவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வோம் என உறுதி அளித்துள்ளோம்" என்றார்.

ஹிந்து தலைவர் கொலை





வடக்கு வங்கதேசத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஹிந்து குழு தலைவர் அடித்து கொலை செய்ப்பட்டார். பூபேஷ் சந்திராபாய் 56. இவர் வீட்டில் இருந்த போது பைக்கில் வந்த மர்ம கும்பல் இவரை அடித்து கொன்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement