சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

1


புதுடில்லி: சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து ஆன்லைன் புக்கிங்கில் மோசடிகள் நடப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட், இணைய வழி பண மோசடி அதிகரித்து வருகிறது. தற்போது சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து ஆன்லைன் புக்கிங்கில் மோசடிகள் நடக்கிறது.



* கேதார்நாத், சார்தாம் யாத்திரை செல்பவர்கள், ஓட்டல், டாக்சி சேவைகள் முன்பதிவுக்கு அரசாங்க மற்றும் நம்பகமான பயண நிறுவனங்களின் சமூக வலைதளங்களைபயன்படுத்த வேண்டும்.



* பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன் சமூக வலைத்தளங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும்.


* மோசடியில் சிக்கி கொண்டால், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


* கேதார்நாத் யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்ய https://www.heliyatra.irctc.co.in, https://somnath.org என்ற இணையதளங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement