ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.


ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் 86 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 12.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.


நிலநடுக்கம் எதிரொலியாக கட்டங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சம் அடைந்து கட்டடங்களை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்செலவு, உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


இந்த நிலநடுக்கம் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், டில்லி உள்ளிட்ட பல வட மாநில பகுதிகளிலும் உணரப்பட்டது.


பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் என பல நகரங்களும் குலுங்கின.

Advertisement