ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!

12

புதுடில்லி: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22ம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார்.


மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் சவுதி அரேபியாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 22, 23ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார்.


சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.



இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டார். இது பிரதமரின் மூன்றாவது பயணம் ஆகும்.

Advertisement