'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை



தாராபுரம்;தாராபுரம் அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற மில் தொழிலாளி, கடனை கட்டமுடியாததால் தற்கொலை செய்து கொண்டாம்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, மில் கூலி தொழிலாளி ஸ்ரீதர், 25; ஆன்லைன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை சரிவர திருப்பி செலுத்த இயலாததால், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.


நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement