போதைப்பொருள் வழக்கு; கைதான அஜித் பட நடிகர் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிப்பு

கொச்சி: போதைப் பொருள் வழக்கில், மலையாளப் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்தனர். சாக்கோ தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான ' குட் பேட் அக்லி' படத்தில் நடித்து இருந்தர் மலையாள பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மீது வின்சி அலோஷியஸ் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.
மேலும் டாம் சாக்கோ மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, அதனை தூண்டியது மற்றும் கிரிமினல் சதி செய்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால், போலீசை பார்த்ததும் சாக்கோ ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து அங்கிருந்து நீச்சல் குளத்தில் தாவி படிக்கட்டு வழியாக தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சாக்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி இன்று அவர் தனது வழக்கறிஞர்களுடன் வந்து விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 32 கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: ஹோட்டலுக்கு வந்தது போலீசார் என தெரியாது. யாரோ தன்னை தாக்க வந்ததாக நினைத்து தப்பித்து ஓடியதாக சாக்கோ கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
வாசகர் கருத்து (8)
Karthik - ,இந்தியா
19 ஏப்,2025 - 23:49 Report Abuse

0
0
Reply
Yasararafath - Chennai,இந்தியா
19 ஏப்,2025 - 22:07 Report Abuse

0
0
Reply
अप्पावी - ,
19 ஏப்,2025 - 20:07 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
19 ஏப்,2025 - 19:55 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
19 ஏப்,2025 - 19:31 Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
19 ஏப்,2025 - 16:41 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
19 ஏப்,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக 'டோல்கேட்' மாற்றம்
-
சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்
-
3 யூனியன்களில் ரூ.11.82 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
-
ஓடும் பஸ்ஸில் தீயால்தாராபுரத்தில் பரபரப்பு
-
'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை
-
பொன்முடியை கண்டித்துஅ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement