வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து ரயில்  மறியல் செய்த 21 பேர் கைது 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை, வி.சி.க., ஆம் ஆத்மி கட்சியினர் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சீனி முஹம்மது சபீர் தலைமை வகித்தனர்.

மண்டபம் ஒன்றிய செயலாளர் அஜ்மல்தீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட துணை செயலாளர் முஜிப்ரஹ்மான் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளர்கள் அப்துல்சலாம், கோட்டை ஹாரிஸ், வி.சி.க., மேலிட பொறுப்பாளர் முஹம்மது யாசின், மாவட்ட ஐக்கிய ஜமா அத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement