கமுதி வட்டாரத்தில் இடைநிற்றல் மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு

கமுதி : கமுதி வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகள், இடைநிற்றல் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம், ஒருங்கிணைப்பாளர் கோகிலா முன்னிலை வகித்தனர்.

சிறப்பாசிரியர்கள் முத்திருளாண்டி, ராமச்சந்திரன், நாகராணி, டேவிட் ஞானராஜ், கணேஷ், இயன் முறை டாக்டர் முருகவள்ளி ஆகியோர் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பள்ளி தலைமைஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணையோடு வீடு வீடாக சென்று குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி, புதிய மாணவர்கள் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கமுதி அருகே எம்.புதுக்குளம், எஸ்.எம்.

இலந்தைகுளத்தில் இரண்டு மாற்றுத்திறனுடைய இரண்டு குழந்தைகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் கமுதி வட்டாரத்தில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

Advertisement