தமிழகம், புதுச்சேரியில் 25 வரை மிதமான மழை

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், வரும், 25ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குநர் செந்தாமரைகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், 25ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
மேலும், நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, 2 முதல் 3 செல்ஷியஸ் வரை உயரும். இதனால், அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை, 37 முதல் 38; குறைந்தபட்சம் 28 முதல் 29 செல்ஷியசை ஒட்டியே இருக்கும். இன்று நகரின் சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள், தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வேறு வழியில்லை; காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
-
இந்த தி.மு.க., அரசு, ஒரு கோமா அரசு: இ.பி.எஸ்., கடும் தாக்கு
-
டிரம்புக்கு எதிராக கொதிக்கும் அமெரிக்க மக்கள்
-
சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி; தாய், மகன் கைது
-
சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி
-
கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்