வேறு வழியில்லை; காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

7


ஜெருசலேம்: ''காசாவில் தொடர்ந்து சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில், ''காசாவில் தொடர்ந்து சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:



ஹமாஸ் அழிக்கப்பட்டு, அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம். சண்டையிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. அப்போது தான் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement