சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

பாட்னா: பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் நேற்றிரவு போலீஸ் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். உயிரிழந்த கான்ஸ்டபிள் சோனு குமார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி விவேக் தீப் கூறியதாவது: இருவரும் ஒன்றாக வேலை செய்து வந்தனர். கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சில குடும்ப பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கான்ஸ்டபிள் சோனு குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் சோனு குமாரை சர்வ்ஜீத் குமார் சுட்டுக்கொன்றுள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா; 'இன்டர்போல்' உதவியை நாடும் வங்கதேசம்!
-
குடிமகன்கள் அட்டகாசம் மக்கள் மன்றத்தில் புகார்
-
காஷ்மீரில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
-
என்.ஆர்.காங்., பிரமுகர் தர்பூசணி வழங்கி அசத்தல்
-
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
-
நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்து: பா.ஜ., நிராகரிப்பு