சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி; தாய், மகன் கைது

1

சேலம்: ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய் பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் கைது செய்யப்பட்டனர்.


வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு தாராளமாக கஞ்சா கிடைக்கிறது. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள்,விளையாட்டும் மைதானங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா கை மாறுகிறது. அந்த வகையில், சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் படி போலீசார் நடத்திய சோதனையில், சேலம் ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய் பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement