மாடு திருடிய வாலிபர்கள் 3 பேரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

3

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாகாத்தான் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேச்சலுக்கு செல்லும் மாடுகள் தொடர்ந்து திருடு போயிருந்த நிலையில் இன்று மாலை கானாடுகாத்தான் வடகுடிபட்டி வயல்வெளியில் மேய்சலுக்கு சென்ற பசு மாடு வித்தியாசமாக சத்தம் போட்டுள்ளது.


அப்போது அருகில் இருந்த விவசாயி ஒருவர் சென்று பார்த்தபோது வாலிபர்கள் மூவர் பசுமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயன்றது தெரியவந்தது. உடனடியாக கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த கிராமத்தினர் மாடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பிடித்து ஊர் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.


விசாரணையில் மாடு திருடிய சம்பவத்தில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதி சேர்ந்த லோகேஸ்வரன்(20) முகர்ஜி(19) அரவிந்த்(23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement