என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை

4

பெங்களூரு: கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.


கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வி தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.



விடைத்தாள்களில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை கண்டு ஆசிரியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அந்தக் கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற உதவுமாறு கேட்டுக்கொண்டு விடைத்தாளில் ரூ. 500 நோட்டை வைத்தார்.


* மற்றொரு மாணவர் ரூ.500 ரூபாய் நோட்டு வைத்து, ''தயவுசெய்து என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் உள்ளது," என்று கூறியுள்ளார்.

* "நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன்" என்று மற்றொரு மாணவர் விடைத்தாளில் எழுதி இருந்தான்.



* மற்றொருவர், "இந்த ரூ. 500 உடன் தேநீர் அருந்துங்கள், ஐயா, தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள்" என்று எழுதினார்.


* மற்றொரு விடைத்தாளில், ஒரு மாணவர், "நீங்க என்னை தேர்ச்சி பெற செய்தால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்" என்று எழுதினார்.


* "நீ என்னை தேர்ச்சி பெறச் செய்யாவிட்டால், என் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள்" என்று இன்னொருவர் கூறினார்.

* சிலர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற உதவினால் கூடுதல் பணம் தருவதாகவும், இந்த முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்துதான் தங்கள் எதிர்காலம் இருக்கிறது என்றும் மாணவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் இணையத்தில் கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement