வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி

உடுமலை: உடுமலை - மூணாறு ரோட்டில், கேரள வனத்துறையின், சின்னாறு சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு செல்லும் வழித்தடம், தமிழக - கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளது. தினமும், பஸ், சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள், கார், பைக் என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.
கேரள மாநில எல்லை பகுதியான சின்னாறு பகுதியில், கேரள வனத்துறை சோதனை சாவடி உள்ளது. கேரளாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், இங்கு நிறுத்தப்பட்டு, வாகன எண் பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இதனால், நேர விரையம் ஏற்படுவதோடு, வாகன நெரிசலும் அதிகரித்து காணப்படும். அதிலும், கோடை விடுமுறை மற்றும் விடுமுறை தினங்களில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் செல்லும் போது, வாகன பதிவுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது கேரள வனத்துறை சார்பில், நவீன தொழில் நுட்பத்தின் கீழ், வாகன பதிவு செய்யப்படுவதோடு, கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக, சோலார் வசதியுடன் இயங்கும் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா, சோதனை சாவடியை கடக்கும் வாகனம், நிறம், நம்பர் பிளேட் மற்றும் டிரைவரை போட்டோ எடுக்கும். வாகனத்தின் முழு விபரங்களையும் கம்ப்யூட்டரில், தானியங்கி முறையில் பதிவு செய்யப்படுகிறது. நேரம் வாரியாக உடனடியாக பதிவு செய்ததும், தானியங்கி முறையில் தடுப்பும் திறக்கப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள், வாகன நகர்வுகளை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 'சி.சி.டி.வி.,' காட்சிகளை 'டிவி' திரையில் பார்க்க முடியும். இதனால், சோதனை சாவடியில் வாகன பதிவுக்கு ஏற்படும் கால விரையம் தடுக்கப்படுவதோடு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மேலும்
-
இந்த தி.மு.க., அரசு, ஒரு கோமா அரசு: இ.பி.எஸ்., கடும் தாக்கு
-
டிரம்புக்கு எதிராக கொதிக்கும் அமெரிக்க மக்கள்
-
சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி; தாய், மகன் கைது
-
சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி
-
கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை