நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 19) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய 'போக்சோ'
சிறுமி கர்ப்பம்; கணவர் 'எஸ்கேப்'
வேலுார், சம்பத் நகரை சேர்ந்தவர் தனுஷ், 23. இவரும், வேலுாரை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து, இருவரும் வள்ளிமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். சிறுமி, தற்போது இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக, வேலுார் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வேலுார் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது, போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
நிர்வாண போஸ் தந்தவர் கைது
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன், 19. அவரது வீட்டின் அருகே பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டிலிருந்த 17 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் துணி உலர வைத்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற தமிழரசன், சிறுமியின் முன் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நின்றார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர், அந்த வாலிபரை தட்டிக்கேட்டனர். அப்போது, தமிழரசனின் அண்ணன் பூவரசன், 21, சிறுமியின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். சிறுமி தந்தை புகார் படி, நாட்றம்பள்ளி போலீசார், தமிழரசன், பூவரசனை கைது செய்தனர்.
15 வயது சிறுமிக்கு தொந்தரவு
திருப்பத்துார் மாவட்டம், ஜமுனபுதுார், குமரன் நகரை சேர்ந்த மாதேஷ், 20. இவர், பெரம்பலுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மார்ச் 2ல், சேலம் வழியே பெரம்பலுாருக்கு தனியார் பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் பயணித்த, சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த, 15 வயது சிறுமியிடம், மொபைல் போன் எண்ணை கொடுத்து பேசி வந்துள்ளார்.
மார்ச் 9ல், ஆத்துார் வந்த மாதேஷ், அச்சிறுமியுடன் பேசிவிட்டு, வெளியே அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ஆத்துார் டவுன் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, நேற்று மாதேஷை கைது செய்தனர்.
குழந்தை பெற்றெடுத்த மாணவி
கோவையை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் படித்து வந்தார். கோபாலகிருஷ்ணன், 22, என்பவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சிறுமியும் கோபாலகிருஷ்ணனை காதலித்துள்ளார். இருவீட்டாரும், கடந்தாண்டு சிறுமிக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும், கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.
பின், கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.








மேலும்
-
இந்த தி.மு.க., அரசு, ஒரு கோமா அரசு: இ.பி.எஸ்., கடும் தாக்கு
-
டிரம்புக்கு எதிராக கொதிக்கும் அமெரிக்க மக்கள்
-
சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி; தாய், மகன் கைது
-
சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி
-
கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை