குடிமகன்கள் அட்டகாசம் மக்கள் மன்றத்தில் புகார்

பாகூர் : பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்தில், புதுச்சேரி போலீஸ் தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கரையாம்புத்துார், பனையடிகுப்பம், சின்ன கரையாம்புத்துார், மணமேடு, கடுவனுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.

மக்கள் மன்றத்தில், 'கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்தில் போதிய போலீசில் இல்லாததால், ரோந்து பணி சரியாக நடைபெறுவது கிடையாது.

கரையாம்புத்துார் எல்லையோர பகுதி என்பதால், இரவு நேரங்களில் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான குடிமகன்கள் வந்து செல்கின்றனர். அவர்கள், சாலையிலேயே அமர்ந்து மது குடிக்கின்றனர்.

மணமேடு தென்பெண்ணையாற்று பாலத்தில், மாலை 6:00 மணிக்கு பிறகு மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது' என, பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement