மனைவி மற்றும் மகள்கள் மீது ஆசிட் வீச்சு; தந்தை மீது மகன் புகார்

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் தூஙகிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய தந்தையின் மீது மகன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திக்ரி கிராமத்தைச் சேர்ந்த ராம்குனி,39, தனது இரு மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது கணவன் ராம் கோபால் ஷகாபாத் ஹர்தோயில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ராம்குனி தனது மகள்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த ராம் கோபால், ஆசிட்டை வீசி 3 பேர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், குடிக்கு அடிமையான தந்தை ராம் கோபால், தங்களின் விவசாய நிலத்தை விற்று விட்டதாகவும், இதனால், தாய் தனியாக வந்து விட்டதாகவும் கூறினார். எனவே, தாயின் மீது சந்தேகப்பட்டு, இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக போலீஸில் கூறியுள்ளார்.

Advertisement