தி.மு.க.,வை நம்பி இருப்பதுபோல் தோற்றம் உருவாக்குகிறார்கள்: திருமா வருத்தம்

சென்னை: ''ஏதோ நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சி பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.
தி.மு.க.,வை நம்பி...!
ஆனால் எந்த பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.
துணிச்சல், தெளிவு,
எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடுகாட்டவில்லை.
எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.
துருப்புச்சீட்டு
இது புரிந்து கொள்ள முடியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
வி.சி.க., பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு வி.சி.க., தான்.
கூட்டணி உறவு
எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு.
ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. தி.மு.க., உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.










மேலும்
-
கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள 150 ஆண்டு குளம்: சத்தீஸ்கரில் அதிசயம்
-
கோலி, படிக்கல் அபாரம்; இலக்கை நோக்கி முன்னேறும் பெங்களூரு
-
கனடாவில் குருத்வாரா மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
மனைவி மற்றும் மகள்கள் மீது ஆசிட் வீச்சு; தந்தை மீது மகன் புகார்
-
மனைவியால் தூக்கில் தொங்கிய கணவர்; சாக்கடையில் சாம்பலை கரைக்குமாறு வீடியோவில் உருக்கம்
-
குற்றங்களை மூடி மறைக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை பாய்ச்சல்