தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

1

கீவ்: 24 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.


ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, உக்ரைன் உடனான தாக்குதலை, 24 மணி நேர போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் போர் நிறுத்தம் பற்றிய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் அதிபர் புடின் என்றும், எல்லை நகரங்களான குர்ச்க், பெல்கொரேட் போன்ற மாகாணங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


இது குறித்து ஜெலன்ஸ்கி , சமூக ஊடக வீடியோவில் கூறியதாவது:

ஈஸ்டர் நாளில் இன்று தங்கள் நாட்டிற்கு அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்றும், 1,152 நாட்களாக அவர்களுடன் பயணித்து வரும் கடினமான போரின் பாதையை கடக்க விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உக்ரைன் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காது.

உங்களுக்கு அருகில் நிற்பவர்களில். ஆண்களில், பெண்களில் தீமைக்கு அதன் நேரம் இருக்கலாம், ஆனால் கடவுள் தனது நாளைக் பார்த்துக்கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

நாம் எதைப் பாதுகாக்கிறோம் என்பது நமக்கு தெரியும். யாருக்காக, எதற்காகப் போராடுகிறோம் என்பதும் நமக்கு தெரியும்.

"வாழ்க்கை ஒரு நாள் வரும். அந்த அமைதி நாள்,உக்ரைனின் நாள். அந்த நாள் ஒரு நூற்றாண்டு நீடிக்கும். நாம் மீண்டும் ஒன்றுகூட முடியும்."நம்பிக்கையை இழக்க வேண்டாம். நமது தாய்நாடு விடுவிக்கப்படும். வெற்றியின் நாள் வரும்

இந்தப் போரில் உக்ரைனியர்களின் உறுதி மற்றும் தியாகம் தொடர்ந்து உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

இவ்வாறு அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Advertisement