தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 16 பேர் மணிப்பூரில் கைது

1

இம்பால்: மணிப்பூரில் கடந்த 48 மணி நேரத்தில் தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.


மே 2023ல் இன வன்முறை வெடித்ததிலிருந்து மணிப்பூர் முழுவதும் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மெய்தி மற்றும் குக்கி குழுக்களுக்கு இடையிலான இனக் கலவரத்தில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 13 அன்று மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.


இந்நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் கடந்த 48 மணி நேரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:


ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் நேற்று இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நோங்டாம் கிராமத்திற்கு அருகிலுள்ள நாபெட்பள்ளி ஆண்ட்ரோ சாலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டனர்.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நிங்தூகோங் வார்டு எண் 13 இல் இருந்து தடை செய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (தைபங்கன்பா) உறுப்பினரை பாதுகாப்புப் படையினர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட கே.சி.பி.,ன் இரண்டு உறுப்பினர்கள் அதே நாளில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சலாம் மாமாங் லெய்காய் கேதுகி லம்பக்கில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கியாம்கெய் ஹெய்போங் மகோங் பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட பிரெபக் (பிஆர்ஓ) ஒருவரை மாநில காவல்துறை கைது செய்தது.

தடைசெய்யப்பட்ட காங்லேய் யாவோல் கண்ணா லுப் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

தடைசெய்யப்பட்ட பிரேபக்கின் மற்றொரு தீவிர போராளி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சஞ்சென்பாம் ஷாங்ஷாபி கிராமத்தில் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

தௌபால் மாவட்டத்தில் உள்ள ஹெய்ரோக் பகுதி-IIIல் கமாண்டோ குழுக்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் பிரிவுகளால் நடத்தப்பட்ட நள்ளிரவு நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட காங்லேய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மக்கள் போர் குழு) ஏழு போராளிகள் கைது இன்று செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் கற்களை வீசி பணியாளர்களைத் தடுக்க முயன்றனர், நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement