ரூ.17 கோடி மதிப்பு அமெரிக்க டாலர், தங்கம் கடத்தல்: ஜாம்பியாவில் இந்தியர் கைது

5


லுசாகா: ஜாம்பியாவில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.17 கோடி) ரொக்கம் மற்றும் ரூ.4 கோடி மதிப்பு தங்கத்தை துபாய்க்கு கடத்த முயன்ற இந்தியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


உலகில் மிகவும் ஏழ்மை நாடான ஜாம்பியாவில், ஏராளமான தாதுக்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட வளங்கள் உள்ளன. 60 சதவீத மக்கள் வறுமையில் நாடுகின்றனர்.


இந்த நாட்டின் கென்னத் கவுடா சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய் செல்வதற்காக வந்த 27 வயது மதிக்கத்தக்க இந்தியரின் பெட்டியை பரிசோதனை செய்தனர்.


அதில், பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2,320,000 டாலர் ரொக்கம் மற்றும் 5,00,000 டாலர் மதிப்புள்ள தங்கம்( இந்திய மதிப்பில் 4 கோடியே 27 லட்சம் ரூபாய்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement